ஒன்றியங்கள்
Unions
- கோவை ஒன்றியம்
- கடலூர் ஒன்றியம்
- தர்மபுரி ஒன்றியம்
- திண்டுக்கல் ஒன்றியம்
- ஈரோடு ஒன்றியம்
- Kallakurichi Union
- காஞ்சிபுரம் திருவள்ளூர் ஒன்றியம்
- கன்னியாகுமாரி ஒன்றியம்
- கரூர் ஒன்றியம்
- கிருஷ்ணகிரி ஒன்றியம்
- மதுரை ஒன்றியம்
- நாமக்கல் ஒன்றியம்
- நீலகிரி ஒன்றியம்
- புதுக்கோட்டை ஒன்றியம்
- சேலம் ஒன்றியம்
- சிவகங்கை ஒன்றியம்
- தஞ்சாவூர் ஒன்றியம்
- தேனி ஒன்றியம்
- Thirupathur Union
- தூத்துக்குடி ஒன்றியம்
- திருநெல்வேலி ஒன்றியம்
- திருப்பூர் ஒன்றியம்
- திருவண்ணாமலை ஒன்றியம்
- திருச்சி ஒன்றியம்
- வேலூர் ஒன்றியம்
- விழுப்புரம் ஒன்றியம்
- விருதுநகர் ஒன்றியம்
சேலம் ஒன்றியம்:
சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 07.10.1978 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. துவக்கத்தில் சேலம் ஒன்றியம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை விவகார எல்லையாக கொண்டு செயல்பட்டு வந்தது. நிர்வாக வசதிக்காக, சேலம் ஒன்றியத்திலுருந்து 17.12.2018 முதல் நாமக்கல் மாவட்டத்திற்கென தனி ஒன்றியம் பிரிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் ஒன்றியத்தில் 770 பிரதா சங்கங்களில் மொத்தம் உள்ள 229399 உறுப்பினர்களில் 46872 பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் மூலம் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 5 இலட்சம் லிட்டர் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பால்பண்ணை, ஆத்தூரில் 1.30 இலட்சம் லிட்டர் திறம் கொண்ட குளிரூட்டும் நிலையம், மற்றும் நாளொன்றுக்கு 2.87 இலட்சம் லிட்டர் திறன் கொண்ட 58 தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்களும் செயல்பட்டு வருகின்றது. மேலும் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 12 டன் உற்பத்தி திறன் கொண்ட வெண்ணெய் பிரிவு, 06 டன் உற்பத்தித்திறன் கொண்ட நெய் பிரிவு மற்றும் 10 டன் உற்பத்தி திறன் கொண்ட பால் பவுடர் ஆலை பிரிவு செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய பால் சேகரிப்பு பணியில் 113 பால் சேகரிப்பு ஒப்பந்த வழித்தட வாகனங்கள் செயல்படுகிறது.
பாலின் காப்புத் தன்மையினை அதிகரித்திடவும், கிராமப்புற பால் வழித்தட வாகன செலவினை குறைக்கும் நோக்கில், நாளொன்றுக்கு 2.87 கையாளும் திறன் கொண்ட 58 தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்கள் செயல்பட்டு வருகின்றது. உபரிபால் மூலம் பால் உப பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது.
சேலம் ஒன்றியம் பால், பால் பொருட்கள் மற்றும் உப பொருட்கள் விற்பனை செய்து விற்பனை செய்து வருகிறது. ஒன்றியத்தில் தற்போது பால் ஒப்பந்த வழித்தடம் செயல்பட்டு வருகிறது. ஒன்யத்தில் தற்போது 1 அதிநவீன பாலகம் மற்றும் 1 நவீன பாலகம் செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் மற்றும் தனியார் பாலகங்கள் என மொத்தம் 160 ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஒன்றியத்தின் மூலம் சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் போன்ற வெளிநாடுகளுக்கு சமன்படுத்தப்பட்ட பால் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இவொன்றியத்தில் உள்ள நிலை கெடாசிப்பம் காட்டும் நிலையத்திலிருந்து நறுமணப் பால் 9 நறுமணங்களில் அணைத்து ஒன்றியங்களில் மூலம் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.