ஒன்றியங்கள்
Unions
- கோவை ஒன்றியம்
- கடலூர் ஒன்றியம்
- தர்மபுரி ஒன்றியம்
- திண்டுக்கல் ஒன்றியம்
- ஈரோடு ஒன்றியம்
- Kallakurichi Union
- காஞ்சிபுரம் திருவள்ளூர் ஒன்றியம்
- கன்னியாகுமாரி ஒன்றியம்
- கரூர் ஒன்றியம்
- கிருஷ்ணகிரி ஒன்றியம்
- மதுரை ஒன்றியம்
- நாமக்கல் ஒன்றியம்
- நீலகிரி ஒன்றியம்
- புதுக்கோட்டை ஒன்றியம்
- சேலம் ஒன்றியம்
- சிவகங்கை ஒன்றியம்
- தஞ்சாவூர் ஒன்றியம்
- தேனி ஒன்றியம்
- Thirupathur Union
- தூத்துக்குடி ஒன்றியம்
- திருநெல்வேலி ஒன்றியம்
- திருப்பூர் ஒன்றியம்
- திருவண்ணாமலை ஒன்றியம்
- திருச்சி ஒன்றியம்
- வேலூர் ஒன்றியம்
- விழுப்புரம் ஒன்றியம்
- விருதுநகர் ஒன்றியம்
தருமபுரி ஒன்றியம்
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா;கள் ஒன்றியங்கள் என இரண்டாக பிரிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தினை விவகார எல்லையாக கொண்டும், கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டும், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 26.08.2019 முதல் செயல்பட்டு வருகிறது.
ஒன்றியமானது 238 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் 8627 பால் உற்பத்தியாளா;களிடமிருந்து நாள் ஒன்றிற்கு 92000 லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகின்றது. கொள்முதல் செய்யப்படும் பால் கிருஷ்ணகிரி சமநிலை பால்பண்ணை, தேன்கனிக்கோட்டை பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் 5 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களில் குளிர்விக்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் 92000 லிட்டர் பாலில் 58000 லிட்டர் பால் சென்னை இணைய விற்பனைக்கும், 22500 லிட்டா; பால் உள்ளுர் பால் விற்பனைக்கும் அனுப்பப்பட்டு, மீதம் உள்ள பால் வெண்ணெய், நெய், பால் பவுடர் மற்றும் இதர உபபொருட்களாக என பால் உபபொருட்களாக மாற்றம் செய்யப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 2 இலட்சம் லிட்டா; பால் கையாளும் திறன் கொண்ட சமநிலை பால் பண்ணை மற்றும் நாள் ஒன்றுக்கு 1 இலட்சம் லிட்டர் கையாளும் திறன் கொண்ட பால் பவுடர் பிளான்ட் கொண்டுள்ளது. ஒன்றியமானது வெண்ணெய், நெய், பால் பவுடர் குல்பி, கோவா, பாதாம் பவுடர், தயிர், மோர், நறுமணப்பால் ஆகிய பால் உபபொருட்களையும் மற்றும் பண்டிகை நாட்களில் மைசூர்பா தயாரிப்பையும் செய்து வருகிறது.
ஒன்றியத்தில் வெண்ணெய், நெய், பால் பவுடர் கோவா, நறுமணப்பால், பாதாம் பால், தயிர், மோர், மைசூர்பா, ஐஸ்கிரீம் வகைகள், ஜாமூன், ரசகுல்லா மற்றும் குக்கீஸ் வகைகள் மற்றும் இதர பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்:
1. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 4 கால்நடை மருத்துவா;கள் கறவை மாடுகளுக்கு மருத்துவ சிகிச்சை பணியினை செய்து வருகின்றனர்
2. மாண்புமிகு முதல்வர் அவர்களின் 110 விதியின் கீழ் 10 எண்ணிக்கையிலான கியோஸ்க் பார்லர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை பணிகள்:
1. தடுப்பூசி முகாம்கள்.
2. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தடையில்லா செயற்கை முறை கருவூட்டல் மற்றும் கால்நடை நலப் பணிகள்
3. பால் உற்பத்தியாளா;களுக்கு கால்நடை தீவனம் மற்றும் கலப்பு தீவனம் வழங்குதல்.
4. ஒருங்கிணைந்த மலட்டுத்தன்மை நீக்கும் முகாம்கள் அத்துடன் கால்நடை சிகிச்சை பணிகள்.
தொலைநோக்கு திட்டம் 2025
1. ஒவ்வொரு சங்க அளவில் தரமான பால் உற்பத்தி
2. சுத்தமான, சுகாதாரமான பால் உற்பத்தி
3. பால் உற்பத்தியாளா;களுக்கு தரமான பால் உற்பத்தி குறித்த விழிப்புணா;வு
4. கறவை மாடுகளின் ஆரோக்கியம் பேணப்படுவதன் மூலம் பால் உற்பத்தியாளா;களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகை செய்தல்.
5. கன்று ஈனும் காலத்தை பேணுதல்.
6. கறவை மாடுகளின் நலன் மற்றும் சத்துணவு குறித்த தொழில்நுட்ப வளா;ச்சியினை அளித்தல்.
7. அறிவியல் பூர்வமான உணவளிக்கும் முறையினை மேம்படுத்துதல்.
8. பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நட்டத்தினை தவிர்த்தல்.
9. கறவை மாடுகளுக்கு ஏற்படும் ஆரம்ப நிலை நோய் தொற்றினை முன்பே கண்டறிந்து பால் உற்பத்தியாளா;களுக்கு ஏற்படும் இழப்பினை தவிர்த்தல்.