தஞ்சாவூர் ஒன்றியம்:

தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் 1939ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட பால் விற்பனை இணையமாக பதிவு செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் பாலை கொள்முதல் செய்து விற்பனை செய்து வந்தது. பால்வளத்தை பெருக்கும் வெண்மை புரட்சி காலத்தில் 1982-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட பால் விற்பனை விற்பனை இணையம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை இணைத்து பால் கொள்முதலை அடிப்படையாக கொண்டு தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியமாக பதிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட பால் உரோமத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை செயல் எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் ஒன்றியம் 359 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் 24636 பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக 92479 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு சராசரியாக 47548 லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 44931 லிட்டர் பாலில் தயிர், மோர் மற்றும் பால்கோவா தயார் செய்ய நாள் ஒன்றுக்கு சராசரியாக 1200 லிட்டர் பாலும், தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கு சராசரியாக 24000 லிட்டர் பாலும் அனுப்பப்பட்டு வருகிறது. மீதமுள்ள 19731 லிட்டர் பால் பவுடராகவும், வெண்ணையாகவும் உருமாற்றம் செய்யப்படுகிறது. இதில் உருமாற்றம் செய்யப்பட்ட வெண்ணெய் தஞ்சாவூர் ஒன்றியத்திலேயே ஊருக்கு நெய்யக மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் பவுடர் நமது ஒன்றிய தேவைக்கு பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள பால் பவுடர் NCDFI மூலம் விற்பனை செய்யப்படுகிறது.